INDIAN 7

Tamil News & polling

நேரடி நியமனம்..! தமிழகமே.. ரேஷன் கடைகளில் 6,503 காலியிடங்கள்.. நாளையே கடைசி..!!

By E7 Tamil 13 நவம்பர் 2022 03:59 AM
Nature

மாநிலத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாளை மறுநாளுடன் (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை 6503

பதவி : விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள். விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

மாவட்டம் வாரியாக காலியிடங்கள் விவரம்:

மாவட்டம் பணியிடங்கள் ஆன்லைன் லிங்க்
1 கோயம்புத்தூர் 233 https://www.drbcbe.in/
2 விழுப்புரம் 244 https://www.drbvpm.in/
3 விருதுநகர் 164 https://www.vnrdrb.net/
4 புதுக்கோட்டை 135 https://www.drbpdk.in/
5 நாமக்கல் 200 https://www.drbnamakkal.net/
6 செங்கல்பட்டு 178 https://www.drbcgl.in/
7 ஈரோடு 243 https://www.drberd.in/
8 திருச்சி 231 https://www.drbtry.in/
9 மதுரை 164 https://drbmadurai.net/
10 ராணிப்பேட்டை 118 https://www.drbrpt.in/
11 திருவண்ணாமலை 376 https://drbtvmalai.net/
12 அரியலூர் 75 https://www.drbariyalur.net/
13 தென்காசி 83 https://drbtsi.in/
14 திருநெல்வேலி 98 https://www.drbtny.in/
15 சேலம் 276 https://www.drbslm.in/
16 கரூர் 90 https://drbkarur.net/
17 தேனி 85 https://drbtheni.net/
18 சிவகங்கை 103 https://www.drbsvg.net/
19 தஞ்சாவூர் 200 https://www.drbtnj.in/
20 ராமநாதபுரம் 114 https://www.drbramnad.net/
21 பெரம்பலூர் 58 https://www.drbpblr.net/
22 கன்னியாகுமரி 134 https://www.drbkka.in/
23 திருவாரூர் 182 https://www.drbtvr.in/
24 வேலூர் 168 https://drbvellore.net/
25 மயிலாடுதுறை 150 https://www.drbmyt.in/
26 கள்ளக்குறிச்சி 116 https://www.drbkak.in/
27 திருப்பூர் 240 https://www.drbtiruppur.net/
28 காஞ்சிபுரம் 274 https://www.drbkpm.in/
29 கிருஷ்ணகிரி 146 https://drbkrishnagiri.net/
30 சென்னை 344 https://www.drbchn.in/
31 திருப்பத்தூர் 75 https://drbtpt.in/
32 திண்டுக்கல் 310 https://www.drbdindigul.net/
33 நாகப்பட்டினம் 98 https://www.drbngt.in/
34 திருவள்ளூர் 237 https://www.drbtvl.in/
35 தூத்துக்கடி 141 https://www.drbtut.in/
36 நீலகிரி 76 https://www.drbngl.in/
37 கடலூர் 245 https://www.drbcud.in/
38 தர்மபுரி 98 https://www.drbdharmapuri.net/

அந்தந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.drbobo.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரரின் புகைப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).

விண்ணப்பதாரரின் கையெழுத்து - 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)

விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல்(pdf file)

குடும்ப அட்டை - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) (அல்லது)

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (pdf file)

SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண ரசீது செலுத்தியிருப்பின் அந்த ரசீது (pdf file)

(அல்லது)

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தியிருப்பின் (DRB Copy of the pay-in-slip) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் - 100 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) 10.

ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தமுறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

முன்னுரிமை கோரும் இனத்திற்கான/ இனங்களுக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

விண்ணப்பக் கட்டணம்:

விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள். மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.



Whatsaap Channel


வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்