POLLING FLAMES

 

சாம்பியனானது இங்கிலாந்து அணி.. பாகிஸ்தானின் விடாப்பிடி போராட்டம்.. இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி!

3 years ago 13 நவம்பர் 2022 11:58 AM | views : 236
மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த இறுதிப்போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.



இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோரை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 138 ரன்களை மட்டுமே சேர்த்தது.



ஆரம்பமே பாகிஸ்தானுக்கு சறுக்கல் பாகிஸ்தானின் இன்னிங்ஸ் ஓப்பனிங் வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் நிதானமாக தொடங்கி ரன்களை உயர்த்தி வந்தனர். ஆனால் நீண்ட நேரம் அவர்கள் பார்ட்னர்ஷிப் நீடிக்கவில்லை. டேஞ்சர் வீரரான முகமது ரிஸ்வான் 15 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதன்பின்னர் வந்த முகமது ஹாரிஸ் 8 ரன்களுக்கு அவுட்டாக பாகிஸ்தான் அணி 48 ரன்களுக்கெல்லாம் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நல்ல பார்ட்னர்ஷிப் இதன்பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் - ஷான் மசூத் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினார்கள். இதனால் 45/2 என இருந்த ஸ்கோர் 84 ரன்களுக்கு சென்றது.





ஆனால் அப்போது தான் கண்டமே ஏற்பட்டது. அடில் ரஷித் வீசிய பந்தில் கேப்டன் பாபர் துரதிஷ்டவசமாக 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. கடைசி நேர போராட்டம் ஷான் மசூத் 38 ரன்கள், சதாப் கான் 20 ரன்கள், இஃப்திகார் டக் அவுட், முகமது நவாஸ் (5) என அடுத்தடுத்து சரிய 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி 137 ரன்களை மட்டுமே எடுத்தது.



இந்த மைதானத்தில் 138 என்பது விரட்டக்கூடிய ஸ்கோர் தான். ஆனால் அதனை இங்கிலாந்துக்கு எளிதாக எடுத்து தர முடிவெடுக்காத பாகிஸ்தான் டாப் கிளாஸ் பவுலிங்கை வெளிப்படுத்தினர். ஓப்பனிங்கே ஷாக் இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ், சாஹீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் வந்த ஃபிலிப் சால்ட் 10 ரன்களுக்கும், ஜாஸ் பட்லர் 26 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க 45 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்தது.



இதனால் ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது. தூண் போன்று நின்று விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 48 பந்துகளில் 52 ரன்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஏற்கனவே 2010ம் ஆண்டு கோப்பை வென்ற இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது கோப்பையாகும். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி ரஜினிகாந்த் PMK ANBUMANI RAMADOSS AIADMK பாமக பாராளுமன்ற தேர்தல் கனமழை தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் EDAPPADI PALANISWAMI AJITH கொலை COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கைது தமிழ்நாடு சீமான் OPS KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக RAJINIKANTH TAMIL ACTRESS கொரோனா தேவர் ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் நெல்லை NELLAI BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN மதுரை ELECTION COMMISSION விடுமுறை திருப்பரங்குன்றம் வன்னியர் தீபாவளி கள்ளக்காதல் அஜித் சூர்யா தென்காசி CSK SURIYA வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி