POLLING FLAMES

 

அடுத்த டார்கெட் இந்தியாவை வீழ்த்துவது வெல்வோம்.. அமெரிக்க கேப்டன் பேட்டி

1 year ago 07 ஜூன் 2024 04:02 PM | views : 220
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த அமெரிக்க கிரிக்கெட் அணி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி 2009 டி20 சாம்பியனான பாகிஸ்தானை தோற்கடித்து சாதனை படைத்துள்ளது. டாலஸ் நகரில் ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது.

அதைத் துரத்திய அமெரிக்காவும் மிகச் சரியாக 20 ஓவரில் 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்தது. ஆனால் அதை சேசிங் செய்த பாகிஸ்தான் 13 ரன்கள் மட்டுமே எடுத்து டி20 உலகக் கோப்பையில் ஒரு உறுப்பு நாட்டு அணிக்கு எதிராக முதல் முறையாக தோல்வியை சந்தித்தது.

மறுபுறம் வரலாற்றில் பாகிஸ்தானை எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே வெற்றி என்று அமெரிக்கா சாதனை படைத்தது. மிகவும் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி இந்திய வம்சாவளி வீரர்களை வைத்து சமீபத்தில் வங்கதேசத்தை தங்களுடைய சொந்த மண்ணில் 2 – 1 (3) கணக்கில் வீழ்த்தியது. அதே வேகத்தில் இந்த உலகக் கோப்பையில் கனடாவை தோற்கடித்த அந்த அணி தற்போது பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி இந்திய அணியை அமெரிக்கா எதிர்கொள்கிறது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியாவை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கு கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க கேப்டன் மோனன்க் பட்டேல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக விளையாடி வெற்றியும் கண்டதில் மகிழ்ச்சி. இது நம்ப முடியாத செயல்பாடாகும்”

“அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதில் எங்களுடைய கவனம் இருக்கிறது. ஆனால் அதற்காக எங்களுடைய உணர்வுகளை நாங்கள் அதிகமாக அல்லது குறைவாக வைக்க விரும்பவில்லை. இருப்பினும் இந்த வெற்றியால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதிலும் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் வந்து விளையாட உள்ளோம் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்”


“உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தது எங்களுக்கு பல கதவுகளை திறக்கும். இந்த வெற்றியை அதிர்ஷ்டம் என்று சிலர் சொன்னால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. எங்களால் என்ன முடியும் என்பது எங்களுக்கு தெரியும். தற்போதைக்கு தூரத்தில் உள்ள அயர்லாந்துக்கு எதிரான போட்டி பற்றியும் சூப்பர் 8 சுற்று பற்றியும் நாங்கள் சிந்திக்கவில்லை. குறிப்பிட்ட போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழகம் கோவை PARLIAMENT ELECTION CONGRESS UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது சீமான் பிரதமர் மோடி தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN TAMIL ACTRESS நெல்லை சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL RAJINIKANTH ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் வன்னியர் தென்காசி SURIYA தீபாவளி கள்ளக்காதல் அஜித் தேவர் விடுமுறை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் CSK வடகிழக்கு பருவமழை