ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 16வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லேவிட் 0, மேக்ஸ் ஓ’தாவுத் 2, விக்ரம்ஜித் சிங் 12, பஸ் டீ லீசி 6, கேப்டன் எட்வர்ட்ஸ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 46/5 என தடுமாறிய அந்த அணி 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்தலாக விளையாடிய எங்கல்பேர்ச்ட் 40 ரன்கள் எடுத்தார்.
மிரட்டிய மில்லர்:
அவருடன் கடைசி நேரத்தில் வேன் பீக் 23 (22) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய நெதர்லாந்து 20 ஓவரில் 103/9 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக பார்ட்மேன் 4, மார்கோ யான்சென் 2, அன்றிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 104 ரன்களை துரத்திய தென்னாபிரிக்கா மிகவும் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் பந்திலேயே குயிண்டன் டீ காக் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் திணறிய ரீசா ஹென்றிக்ஸ் 3 (10) ரன்களில் அவுட்டானார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஹைடன் மார்க்ரம் டக் அவுட்டானதால் 3/3 என ஆரம்பத்திலேயே தென்னாபிரிக்கா திண்டாடியது. அப்போது வந்த ஹென்றிச் க்ளாஸென் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் – டேவிட் மில்லர் ஆகியோர் நிதானமாக விளையாடி தென்னாபிரிக்காவை சரிவிலிருந்து காப்பாற்றினர். அந்த வகையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு முக்கியமான 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ஸ்டப்ஸ் 33 (37) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் எதிர்புறம் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 59* (51) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
அதனால் மிகப்பெரிய சொதப்பலில் இருந்து தப்பிய தென்னாப்பிரிக்கா 18.5 ஓவரில் 106/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி கண்டது. மறுபுறம் 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த நெதர்லாந்து இப்போட்டியிலும் பயத்தை காண்பித்து முழுமூச்சுடன் போராடியது.
இருப்பினும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் விவியன் கிங்மா, வேன் பீக் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் நெதர்லாந்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் டேவிட் மில்லர் அதிரடியால் ஐசிசி தொடரில் நெதர்லாந்திடம் ஹர்ட்ரிக் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து தென்னாப்பிரிக்கா தப்பியது. ஆனால் இப்படிப்பட்ட பிட்ச்சில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்ளதை நினைத்து இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!