POLLING FLAMES

 

பாகிஸ்தான் நம்மை 119 ரன்களுக்கு அவுட்டாக்க முடிந்தால் நம்மாலும் அவர்களை சுருட்ட முடியும் : ரோகித் சர்மா

1 year ago 09 ஜூன் 2024 11:53 PM | views : 237
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அற்புதமான வெற்றி பெற்றது. ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தோல்வியை சந்திக்கும் என்று பெரும்பாலனவர்கள் எதிர்பார்த்தனர்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து 120 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு ஆரம்பம் முதலே கட்டுக்கோப்புடன் துல்லியமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் அதிரடி காட்ட விட முடியாமல் மடக்கிப்பிடித்தனர்.


அதனால் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி பரிதாபமாக தோற்றது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக வெற்றியைப் பெற்று செய்து இந்தியா சாதனை படைத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் பவுலர்களால் நம்மை 119 ரன்களுக்கு அவுட்டாக்க முடிந்தால் நம்மாலும் அவர்களை சுருட்ட முடியும் என்று இந்திய வீரர்களிடம் சொன்னதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. பாதி இன்னிங்ஸில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிய நாங்கள் கொஞ்சம் குறைந்த ரன்கள் எடுத்தோம்”

“இது போன்ற பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்று பேசினோம். கடந்த போட்டியை விட உண்மையாகவே இது நல்ல பிட்ச்சாக இருந்தது. அதில் எங்களிடம் நல்ல பவுலிங் வரிசை இருந்ததால் வெற்றிக்கான தன்னம்பிக்கையும் இருந்தது. போட்டியின் பாதியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது எங்கள் வீரர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து “இது நமக்கு நடந்தால் அது அவர்களுக்கும் நடக்கும்” என்று சொன்னேன்”


“அனைவரும் வெளிப்படுத்தும் சிறிய பங்கு கூட வெற்றியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். பும்ரா தன்னுடைய பலத்தை வைத்து செல்கிறார். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அறிவோம். அவரைப் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. இந்த உலகக்கோப்பை முழுவதும் அவர் இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவர் ஜீனியஸ் என்பதை நாம் அறிவோம். ரசிகர்கள் கூட்டம் சூப்பர். நாங்கள் விளையாடும் போதெல்லாம் அவர்கள் எங்களை ஏமாற்றுவதில்லை. அவர்கள் வீட்டுக்கு பெரிய புன்னகையுடன் செல்வார்கள் என்று உறுதியாக சொல்வேன். இது ஆரம்பம் மட்டுமே இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் UDHAYANIDHI STALIN இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் PMK தமிழகம் CONGRESS கோவை COIMBATORE கொலை PARLIAMENT ELECTION AJITH EDAPPADI PALANISWAMI திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் OPS அமமுக பிரதமர் மோடி கைது KEERTHY SURESH தமிழ்நாடு கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தேவர் RAJINIKANTH THIRUMAVALAVAN நெல்லை வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் NELLAI TAMIL ACTRESS திருப்பரங்குன்றம் தென்காசி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் CSK கள்ளக்காதல் தீபாவளி அஜித் வன்னியர் SURIYA சூர்யா மதுரை தூத்துக்குடி விடுமுறை