ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி 4 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய ரோகித் சர்மா 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அதனால் 19/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருக்கு எதிர்ப்புறம் நிதானமாக விளையாடி கைகொடுக்க முயற்சித்த அக்சர் பட்டேல் 20 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் 7, சிவம் துபே 3 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.
மாஸ் கம்பேக் வெற்றி:
அடுத்த ஓவரிலேயே மறுபுறம் போராடிய ரிஷப் பண்ட் 42 (31) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 0, ஹர்டிக் பாண்டியா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் கடைசியில் அர்ஷ்தீப் சிங் 9, சிராஜ் 7* ரன்கள் எடுத்தும் 19 ஓவரில் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டானது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நாசீம் ஷா 3, ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 120 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். அதேபோல மறுபுறம் தடுமாறிய முகமது ரிஸ்வான் 7 ரன்களில் கொடுத்த கேட்சை சிவம் துபே கோட்டை விட்டார்.
அதனால் ரசிகர்கள் கடுப்பான நிலையில் அடுத்ததாக வந்து தடுமாறிய உஸ்மான் கான் 13 ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அதைத்தொடர்ந்து வந்த பஃக்கார் ஜமான் அதிரடியாக விளையாடி 13 (8) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த போது பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ரிஸ்வானை 31 ரன்கள் பும்ரா கிளீன் போல்ட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார்.
அதைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் அடுத்ததாக வந்த சடாப் கான் 4, இப்திகார் அகமது 5 ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதனால் கடைசியில் நாசீம் ஷா 10* (4) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
குறிப்பாக 120 ரன்கள் கூட எடுக்காததால் இப்போட்டியில் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சவாலான பிட்ச்சில் துல்லியமாக பந்து வீசிய இந்தியா டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை கட்டுப்படுத்தி அபார சாதனை படைத்து வரலாற்றின் மாஸ் கம்பேக் கொடுத்தது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138/6 ரன்கள் கட்டுப்படுத்தியதே இந்தியாவின் முந்தைய சாதனையாகும்.
இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆல் அவுட்டான ஒரு போட்டியில் வெற்றியைப் பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் தெறிக்க விட்ட இந்தியா சார்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் கொடுத்து 3, ஹர்திக் பாண்டியா 2, அக்சர் படேல் 1, அர்ஷ்தீப் 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!