POLLING FLAMES

 

ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி.. 37 வருடம் கழித்து நியூஸிலாந்துக்கு சோகம்

1 year ago 14 ஜூன் 2024 05:08 AM | views : 206
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 14ஆம் தேதி நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு ட்ரினிடாட் நகரில் 29வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பப்புவா அணி ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அந்த வகையில் மிகவும் திண்டாட்டமாக பேட்டிங் செய்த அந்த அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு 9 வீரர்கள் 20 ரன்கள் தாண்டாத நிலையில் அதிகபட்சமாக கிப்லின் டோரிகா 27 ரன்கள் எடுத்தார்.

வெளியேறிய நியூஸிலாந்து:
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 3, நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 96 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் குர்பாஸ் 11, இப்ராஹிம் ஜாட்ரான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் குல்பதின் நைப் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி 49* (36) ரன்கள் எடுத்தார்.

அவருடன் ஓமர்சாய் 13, முகமது நபி 16* ரன்கள் எடுத்ததால் 15.1 ஓவரிலேயே 101/3 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் குரூப் சி பிரிவின் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் (+2.596) அணியை விட +4.230 என்ற அற்புதமான ரன் ரேட்டை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.

இது இந்த உலகக் கோப்பையில் விளையாடும் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்ற 19 அணிகளை விட அதிகமாகும். இந்த வெற்றியால் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அசத்தியது. குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அந்த அணி கடைசி நேரத்தில் சொதப்பி லீக் சுற்றுடன் வெளியேறியது.


ஆனால் இந்தத் தொடரில் அந்த தவறை செய்யாத ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று குரூப் 1 பிரிவில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. மறுபுறம் இந்த தோல்வியால் அதே பிரிவில் 2 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் வாயிலாக 1987 உலகக் கோப்பைக்குப் பின் 37 வருடங்கள் கழித்து நியூஸிலாந்து அணி முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறி சோகத்தை சந்தித்துள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK ANBUMANI RAMADOSS AIADMK டிடிவி தினகரன் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி தமிழகம் கோவை CONGRESS PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் COIMBATORE AJITH கைது KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM தமிழ்நாடு அமமுக OPS சீமான் பிரதமர் மோடி THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் கொரோனா BIGG BOSS TAMIL NELLAI நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் SURIYA வன்னியர் தூத்துக்குடி தென்காசி கள்ளக்காதல் ELECTION COMMISSION மதுரை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தேவர் RAJINIKANTH விடுமுறை CSK சூர்யா அஜித் தீபாவளி திருப்பரங்குன்றம்