இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24-ம் தேதி புனே நகரில் துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் விளையாடி வருவதால் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக கே.எல் ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய அணி செய்த இந்த மாற்றங்கள் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் : காயம் தொடர்பான கவலையா தவிர்த்து மற்றபடி இப்படி மூன்று பேரை ஒரே போட்டியில் மாற்றம் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு மாற்றத்தை இந்திய அணி செய்தது எனக்கு வேடிக்கையாகவும் இருக்கிறது.
ஏனெனில் இப்படி ஒரு மாற்றத்தை நான் கடந்த காலங்களில் பார்க்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது பேட்டிங் ஆர்டரில் கைகொடுக்கும் என்றாலும் அது கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது. ஏனெனில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கையில்லாத போது தான் பின் வரிசையில் பேட்ஸ்மேன்களை சேர்ப்பார்கள்.
அந்த வகையில் தற்போது அவரை சேர்த்திருப்பது எனக்கு பேட்டிங் பலம் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடது கை வீரர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் அவர்களை தேர்வு செய்துள்ளது ஏற்றுக்கொள்ளும்படிதான் உள்ளது என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!