INDIAN 7

Tamil News & polling

பிக்பாஸ் நடிகை ரம்யா பாண்டியன் பிறந்தநாள்!

13 ஆகஸ்ட் 2021 10:36 AM | views : 687
Nature

நடிகர் அருண்பாண்டியனின் சகோதரரும் திரைப்பட இயக்குநர் துரைப்பாண்டியனின் மகளுமான இவர், திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். நடிகை ரம்யா பாண்டியன் பிறந்தநாள் இன்று.

















சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், சிறிது காலம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து சினிமா மீதான ஆர்வம் காரணமாக, ஆரம்பத்தில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பிறகு ராஜு முருகனின் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.





“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது சினிமாவை தவிர, சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.இயற்கை விவசாயம் மீது ஆர்வம் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன், ஓய்வுநேரத்தை தன் வீட்டு மாடித் தோட்டத்தில் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.





பிக்பாஸ் நடிகை  ரம்யா பாண்டியன் பிறந்தநாள்!1

பிக்பாஸ் நடிகை  ரம்யா பாண்டியன் பிறந்தநாள்!2

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்