18 வயது நிரம்பிய மனைவியுடன் கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சட்டம் கூறுகிறது. மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்திருந்தாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது எனவே குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவிப்பதாக சத்தீஸ்கர் நீதிமன்றம் தெரிவித்தது.
மனைவியின் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இயற்கைக்கு முரணான வகையில் தன்னிடம் உறவில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு முரணான உடலுறவு, பெண்களுக்கு எதிரான கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் கணவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கே.சந்திரவன்சி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ’18 வயது நிரம்பிய மனைவியுடன் கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சட்டம் கூறுகிறது. இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே கணவர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்திருந்தாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது’ என்று நீதிபதி தெரிவித்தார்.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!