பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஆபாச இணையதளங்களை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருச்சியை சேர்ந்து ரவுடி பேபி என அழைக்கப்படும் டிக்டாக் புகழ் சூர்யாவின் யூடியூப் சேனலையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடி பேபி சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘ஆபாச வீடியோக்களை வெளியிடும் யூடியூப் ேசனலை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் எனது சேனலை முடக்குறீங்களா... முடக்குங்க.... நான் தவறான பாதைக்கு போவேன்.. சத்தியமா போவேன். என் பிள்ளை மேல ஆணையா போவேன்... போவேன்... 100 பேருடன் ‘அதுக்கு’ தயார்.
என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்... என்பதோடு அருவருக்கத்தக்க வகையிலும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரவுடி பேபி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்தி நகரை சேர்ந்த டிக்டாக் புகழ் சூர்யாதேவி(35), ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தரை செருப்பால் அடிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S