POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

களைகட்டிய கொடைக்கானல் படகு சவாரி

4 hours ago 26 ஏப்ரல் 2026 04:45 AM | views : 13

நீலகிரி,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்கவும். குளு குளு சீசன் தொடங்கிய நிலையில் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் நேற்று காலை முதல் அவர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் எங்கு பார்த்தால் மக்களின் தலையாகவே இருந்தது.

இதனால் சீனிவாசபுரம், உகார்த்தேநகர், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, பாம்பார்புரம் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

இதனால் பல்வேறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டதால் கொடைக்கானல் நகரமே திக்குமுக்காடி போனது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்பு அடைந்தனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் 21 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது. பின்னர் பிற்பகல் முதல் அதிகாலை வரை லேசான காற்றுடன் கூடிய இதமான குளிரும் நிலவி வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். மேலும் வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், பூங்காவில் பூத்துள்ள பூக்களைக் கண்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். உதகை, கொடைக்கானலில் இதமான காலநிலையில் படகு, குதிரை சவாரி செய்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

கோடை வெப்பத்தைத் தணிக்க நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து நீராடி மகிழ்ந்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை CHENNAI சென்னை பாஜக BJP TVK ANNAMALAI ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் தவெக டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU AIADMK மு.க.ஸ்டாலின் PMK பாமக UDHAYANIDHI STALIN கனமழை முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் காங்கிரஸ் திருமாவளவன் கோவை சீமான் கைது COIMBATORE PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM தமிழகம் CONGRESS OPS வன்னியர் பிரதமர் மோடி கொலை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI அமமுக THIRUMAVALAVAN தேவர் வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS SURIYA தமிழ்நாடு NELLAI AJITH தென்காசி மதுரை நெல்லை ஓபிஎஸ் விடுமுறை திருப்பரங்குன்றம் TAMILAGA VETTRI KAZHAGAM அஜித் CSK அன்புமணி தூத்துக்குடி பாலியல் தொல்லை RAJINIKANTH தீபாவளி கள்ளக்காதல் ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் கொரோனா BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல்