அதிகாரிகள் உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

By Admin | Published in செய்திகள் at அக்டோபர் 11, 2021 திங்கள் || views : 289

அதிகாரிகள் உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

அதிகாரிகள் உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

தூத்துக்குடியில் உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரிய நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி ராமலட்சுமி (37). இவர், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் வாகனத்திற்கு அருகே திடீரென டீசலை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து ராமலட்சுமியின் மீது தண்ணீர் ஊற்றி அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராமலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக தற்காலிக பணி செய்து வருகிறேன். நான், பணியில் சேர்ந்த நாள் முதலே வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் என்னிடம் தகராறு செய்து வந்தார். என்னை வேலையை நீக்குவதற்கு பல்வேறு சதிகளை செய்து எனக்கு தொந்தரவு கொடுத்தார். மேலும் உயரதிகாரிகள் மூலம் எனக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கி இரவு 9 மணி வரை வேலை வாங்கினார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தான் என்பவரும் உடந்தையாக செயல்பட்டார்.

மேலும் அரசின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்கள் முறைகேடாக எனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி என்னை மிரட்டி எனது ஏ.டி.எம். கார்டு மூலமாக அந்த பணத்தை எடுத்து செலவு செய்து வந்தனர். தற்பொழுது என்னை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காக, நான் அரசு பணத்தை மோசடி செய்தது போல என் மீது வீண்பழி போடுகின்றனர். இதை எதிர்த்து கேட்டதற்கு, நிலைமையை சரிசெய்ய என்னை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தானும், அவரின் ஓட்டுநர் கனகராஜூம் உல்லாசத்திற்கு வரவேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர்.

இதற்கு நான் உடன்பட மறுத்ததால் என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இரண்டு குழந்தைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் எனக்கு இந்த வேலையை தவிர வேறெதுவும் தெரியாது. என்மீது விழுந்துள்ள பழியை நீக்குவதற்கும் வழிதெரியாமல் தான் இன்று தீக்குளிக்க முயன்றேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் மாவட்ட ஆட்சியர்
Whatsaap Channel
விடுகதை :

100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?

விடுகதை :

உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?

விடுகதை :

தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?

திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!

திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி

பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை

பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next