POLLING FLAMES

 

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி.. கொரோனா தொற்றால் காலமானார்

4 years ago 17 மே 2021 01:15 AM | views : 239
இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்று காரணமாக சற்று நேரத்திற்கு முன் காலமானார். அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜா. முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பில் கவனம் ஈர்த்தார். இதுமட்டுமின்றி இவர் பீட்சா, தெறி, காக்கி சட்டை உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில், இவர் எழுதிய நெருப்புடா பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பல்வேறு படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ள இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018இல் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இவர் கடந்த 2019இல் இந்தியில் வெளியான ஆர்டிகில் 15 திரைப்படத்தைத் தமிழில் ரீமெக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதில் உதயநிதி கதாயநாயகான நடித்து வருகிறார்.

கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அருண்ராஜா காமராஜாவின் மனைவிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்து. இந்நிலையில், அவரது மனைவி கொரோனா தொற்று காரணமாகச் சற்று நேரத்திற்கு முன் காலமானார். இதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN கோவை CONGRESS இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கொலை அமமுக தமிழ்நாடு INDIAN CRICKET TEAM சீமான் AJITH KEERTHY SURESH OPS கைது பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் நெல்லை RAJINIKANTH NELLAI தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தீபாவளி கொரோனா THIRUMAVALAVAN TAMIL ACTRESS ஓபிஎஸ் வன்னியர் மதுரை CSK அஜித் தேவர் தென்காசி தூத்துக்குடி சூர்யா திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் விடுமுறை கள்ளக்காதல் SURIYA ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை