டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் விபரம் நேற்று அறிவிப்பட்டது.
தங்களது பலம் பேட்டிங் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ( Babar Azam ) தெரிவித்துள்ளார்.7வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் சூப்பர் 12 சுற்றுக்கான குரூப் ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பொதுவாக இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இன்றைய ஆட்டத்தை காண இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.இந்தியாவுக்கு எதிராக ஆடும் பாகிஸ்தான் அணிநேற்று அறிவிக்கப்பட்டது. பாபர் ஆசாம் (c) முகமது ரிஸ்வான் (wk), ஃபகார் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான் (vc), இமாத் வாசிம், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இன்றைய ஆட்டம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், எங்கள் முக்கிய பலம் பேட்டிங் என்று நான் நினைக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் பேட்ஸ்மென் செயல்பட்டு வரும் விதம், எங்கள் பேட்டிங் காரணமாக நாங்கள் சில நல்ல முடிவுகளைத் தருவோம். மேலும் ஃபீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படாதது தொடர்பாக பேசும்போது, கடந்த காலத்தில் நாங்கள் செய்ததை மறந்துவிட்டோம், எதிர்காலத்தில் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். இந்தப் போட்டியில் களத்தில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் மேலும் சிறந்த முடிவுகளை உருவாக்க முயற்சிப்போம் என்று கூறினார்.இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் தொடங்குகிறது.
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!