கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!

Published : 4 months ago       Views : 2473

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் ரம்யா பாண்டியனும் தடுப்பூசிப் போட்டுக்கொண்டு அந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Tags : Ramya Pandian     ரம்யா பாண்டியன்     கொரோனா     கொரோனா தடுப்பூசி    

Recent News