பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

By Admin | Published in செய்திகள் at ஆகஸ்ட் 03, 2021 செவ்வாய் || views : 192

பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

சின்னத்திரை வரலாற்றில், மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது ஐந்தாவது சீசனுக்கு தயாராகி வருகிறது. கொரோனா தொற்று, ஊரடங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு சிக்கக்களுக்கிடையே, பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது.

கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 முடிந்த உடனேயே அடுத்த சீசன் எப்போது வரும் என்ற கேள்வி எழும்பியது. 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியும் தொடங்கி விட்ட நிலையில், ஊரடங்கும் தளர்வுகளுடன் இருக்கின்ற சூழலில். அடுத்த சீசன் எப்போது தொடங்கப்போகிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 க்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுவதும் நீங்காத சூழலில், நிகழ்ச்சி தொடக்கம் பற்றி இன்னும் முடிவு செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால், சமீபத்திய கிடைத்துள்ள தகவல், பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும், பிக்பாஸ் 5 ஆவது சீசனுக்கு லோகோ தயாராகி விட்டது என்றும், இந்த மாதம் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளியாகலாம்.

அது மட்டுமின்றி, கடந்த சீசனைப் போலவே, இந்த சீசனிலும் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில், சீரியல் நடிகர் ஒருவர் பிக்பாசில் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ஒருவர், இந்த சீசனில் பங்கேற்பது உறுதி என்று கூறப்படுகிறது. மற்ற பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல், புதிய செட், நிகழ்ச்சி தொடக்கம், அது மட்டுமின்றி, நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக தொகுத்து வரும் நடிகர், பன்முகக் கலைஞர் கமலஹாசனின் கெட்டப் போன்றவை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும்.

அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், தினசரி வெளியிடப்படும் ப்ரோமோவுக்கு லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருப்பு, பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவாக்குவது, என்ற மிகப்பெரிய திருவிழாவி கலந்து கொள்வது போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் இருக்கும்.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவராஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

பிக்பாஸ் 5 BIGG BOSS TAMIL 5 BIGG BOSS TAMIL BIGG BOSS KAMAL HASSAN
Whatsaap Channel
விடுகதை :

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?

விடுகதை :

இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?

விடுகதை :

கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?

இது ஒன்னும் உங்க அப்பன் வீடில்ல; பிக் பாஸில் ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா!

இது ஒன்னும் உங்க அப்பன் வீடில்ல; பிக் பாஸில் ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் 6 வாரம் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற கான்செப்டில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பாய்ஸ் ஒரு அணியாகவும், கேர்ள்ஸ் ஒரு அணியாகவும் பிரிந்து விளையாடி வந்தனர். ஆனால் அந்த ஆட்டம் சுவாரஸ்யம் இல்லாததால் இரு அணிகளாக இருந்த பிக்பாஸ் வீடு தற்போது

டபுள் எவிக்‌ஷனா! பிக் பாஸ் வீட்டைவிட்டு ஜோடியாக எலிமினேட் ஆகப்போவது யார்?

டபுள் எவிக்‌ஷனா! பிக் பாஸ் வீட்டைவிட்டு ஜோடியாக எலிமினேட் ஆகப்போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கடந்த வாரம் வரை பெரியளவில் சண்டைகள் எதுவும் இல்லாததால் சற்று டல்லாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் இந்த வாரம் முதல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். காரணம், இந்த வாரம் நடைபெற்ற ‘நானும் பொம்மை நீயும் பொம்மை’ டாஸ்க் தான். இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அடிதடியில்

திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்

திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்

2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா

2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா

அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்

அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்

தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

prev whatsapp Twitter facebook next