POLLING FLAMES

 

ஆசைக்கு இணங்காத அத்தையை கொலை செய்த ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை!

1 year ago 24 ஜூன் 2024 02:00 PM | views : 201
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி (35) என்கிற மனைவியும், ஒரு பெண் ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயமுருகனின் உறவினரான ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சென்னை எழும்பூரை சேர்ந்த அருண்குமார் (32). என்பவர் கடந்த 14.06.2016 அன்று தனது அத்தை கிருஷ்ணவேணி அவரது வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அப்போது கிருஷ்ணவேணி அருண்குமாரிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தனது பாலியல் இச்சைக்கு இணங்காத அத்தை கிருஷ்ணவேணியை கடுமையாக தாக்கி கழுத்து, தாடை மற்றும் வயிற்று பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தி கிழித்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணவேணியின் தம்பி உதயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம் போலீசார் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் அருண்குமாருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். இதில் அருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் AIADMK ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN CONGRESS இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION கோவை கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் TAMILAGA VETTRI KAZHAGAM OPS பிரதமர் மோடி தமிழ்நாடு கைது சீமான் அமமுக திருமாவளவன் KEERTHY SURESH AJITH INDIAN CRICKET TEAM TAMIL ACTRESS தேவர் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை தீபாவளி ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் விடுமுறை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் சூர்யா மதுரை தூத்துக்குடி THIRUMAVALAVAN CSK வன்னியர் SURIYA தென்காசி திருப்பரங்குன்றம்