POLLING FLAMES

 

ரன்கள் அடிக்காவிட்டாலும் ஃபீல்டிங்கில் 30 ரன்களை சேமிக்குறார் ரவீந்திர ஜடேஜா.. கவாஸ்கர் பதிலடி

1 year ago 26 ஜூன் 2024 10:01 AM | views : 279
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றில் விளையாட உள்ளது. இத்தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்திய அணி செமி ஃபைனலில் ஜூன் 27ஆம் தேதி இங்கிலாந்தை கயானா நகரில் எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார். பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் இப்படி சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதே போல முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் இதுவரை பேட்டிங்கில் அசத்தவில்லை.

அதே போல பந்து வீச்சிலும் சமாராக செயல்படுவதால் அவருக்கு கேப்டன் ரோஹித் சர்மா நம்பி முழுமையான வாய்ப்பு வழங்குவதில்லை. எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு சஞ்சு சாம்சன் போன்ற இதர வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று ஒருதரப்பு ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேட்டிங்கில் ரன்கள் அடிக்காவிட்டாலும் ஃபீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு 20 – 30 ரன்களை ரவீந்திர ஜடேஜா சேமிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எனவே தொடர்ந்து அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அவர் மிகவும் அனுபவமிக்கவர் என்பதால் நான் கவலைப்படவில்லை. தமக்குக் கிடைத்த வாய்ப்புகளில் அவர் இப்போதும் நன்றாகவே செயல்பட்டுள்ளார். இந்த நேரத்தில் தன்னுடைய அற்புதமான ஃபீல்டிங் திறன், கேட்சுகளைப் பிடிப்பது, ரன் அவுட் செய்வது போன்றவற்றால் அவர் 20 – 30 ரன்களை சேமிக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்”

“அந்த 20 – 30 ரன்களை மறக்க வேண்டாம். அதன் பின் களத்திற்கு வரும் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் செய்யும் அனைத்தும் அவருடைய திறனுக்கு மதிப்பை சேர்க்கும் அம்சமாகும். எனவே ரவீந்திர ஜடேஜா பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. 2 போட்டிகள் நன்றாக செல்லவில்லை என்றால் இவரை வைத்து என்ன செய்வது? என்று பேசுவதே இந்தியா மற்றும் இந்திய ரசிகர்களின் பிரச்சினையாகும்”


“அதுவே கவலை என்பது உங்களுக்கு தெரியும். பொதுவாக யார் எந்த தொழில் ஈடுபட்டாலும் 2 தவறை செய்தால் அதை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் விளையாட்டில் இது தொலைக்காட்சியில் பேசுவதற்கு நல்ல விவாத பொருள். எனவே பிளேயிங் லெவனில் நீங்கள் ஜடேஜாவின் இடத்தை பற்றி கேள்வி எழுப்பக் கூடாது. அவர் ஒரு ராக் ஸ்டார்” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக TAMIL NADU மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் ரஜினிகாந்த் PMK இந்திய அணி ANBUMANI RAMADOSS கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் தமிழகம் UDHAYANIDHI STALIN CONGRESS கோவை INDIAN CRICKET TEAM AJITH அன்புமணி ராமதாஸ் COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கொலை கைது KEERTHY SURESH அமமுக OPS தமிழ்நாடு PARLIAMENT ELECTION சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி ஓபிஎஸ் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை RAJINIKANTH BIGG BOSS TAMIL NELLAI கொரோனா THIRUMAVALAVAN வன்னியர் தென்காசி தீபாவளி விடுமுறை மதுரை SURIYA சூர்யா ELECTION COMMISSION தேவர் CSK திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி அஜித் கீர்த்தி சுரேஷ்