POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

தி.மு.க. 2 முறை ஆட்சிக்கு வராது என்ற கூற்றை உடைத்து ஆட்சி அமைப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 hours ago 21 ஏப்ரல் 2026 12:37 PM | views : 8

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

“கடந்த முறை தேர்தல் நடந்தபோது “ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை. அதனால் முதலமைச்சராக முடியாது” என்றார்கள். அந்தக் கட்டத்தை உடைத்து, முதலமைச்சராகிவிட்டேன். இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், “தொடர்ந்து தி.மு.க. 2 முறை ஆட்சிக்கு வந்தது இல்லையாம்”.

இந்த முறை, அதையும் உடைத்து இரண்டாவது முறையாக, உங்களுடைய அன்போடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வரத்தான் போகிறான்.

அது ஏதோ பதவிக்காக வருகிறோம் என்று நினைக்காதீர்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதால்தானே தவிர, வேறு அல்ல.

பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏழாவது முறையாக மலரவும், நான் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பதற்கு நல்வாய்ப்பையும் தேடித் தாருங்கள் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய கார்த்திக் மோகன், ஒரு நல்ல இளைஞர். துடிப்பானவர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அந்த சிரித்த முகத்தோடு, உங்களுடைய குறைகளை எல்லாம் கேட்டு, உங்களையும் சிரிக்க வைப்பார். உங்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சியை வர வைப்பார்.

என்ன பிரச்சினை என்றாலும், துடிப்போடு உங்களுக்காகப் பணியாற்றக் கூடிய ஒரு சிறந்த இளைஞரைத்தான் தேர்ந்தெடுத்து, இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI தவெக ADMK AMMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் AIADMK TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் PMK MK STALIN பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் பாமக காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை திருமாவளவன் இந்திய அணி ரஜினிகாந்த் CONGRESS கோவை சட்டசபை தேர்தல் கைது EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி COIMBATORE முக ஸ்டாலின் தமிழகம் சீமான் UDHAYANIDHI STALIN OPS THIRUMAVALAVAN கொலை தேவர் KEERTHY SURESH வன்னியர் அமமுக INDIAN CRICKET TEAM சூர்யா கொரோனா ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS மதுரை நெல்லை SURIYA தென்காசி NELLAI AJITH PARLIAMENT ELECTION தமிழ்நாடு திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION கள்ளக்காதல் தூத்துக்குடி ASSEMBLY ELECTIONS அஜித் BIGG BOSS TAMIL கீர்த்தி சுரேஷ் விடுமுறை அன்புமணி CSK பாலியல் தொல்லை TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI மோடி