தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கரும்பு தோட்டத்துக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்கள் தன்னை சாதி ரீதியில் விமர்சித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கும் முடிவே இல்லை என்பது போல அவ்வப்போது அதிரவைக்கும் பாலியல் குற்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் உள்ளது.
திருமணம் ஆகி சில மாதங்களே ஆன இளம் தலித் பெண் ஒருவர், தனது தாயுடன் நடந்து சென்ற போது 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகர் அருகே பிபி நகர் எனும் பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் தலித் பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது. தனது தாய் வீட்டுக்கு வந்த அந்த 19 வயது பெண், கடந்த புதன் கிழமையன்று திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாயுடன் சென்றிருக்கிறார். திருவிழாவை முடித்துவிட்டு நள்ளிரவில் தனியாக தனது தாயுடன் நடந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அதிகாலை 2 மணியளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த 19வயது பெண் மட்டும் தனியாக ஒதுங்கியிருக்கிறார். திடீரென மகளின் அலரல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் பதறித்துடித்த அப்பெண்ணின் தாய், சத்தம் வந்த திசையை நோக்கி ஓடோடி சென்று பார்த்த போது அவரால் தனது மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
அங்கே தேடிப்பார்த்துவிட்டு மகளை காணாததால் தாமதிக்காமல் தனது வீட்டுக்கு சென்று நடந்தவற்றை குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அந்தப் பெண் தொலைந்து போன இடத்துக்கு வந்து தேடிப்பார்த்தபோது அங்குள்ள புதரில் மயக்கமடைந்த நிலையில் அந்த 19 வயது பெண் இருப்பதை பார்த்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த அப்பெண் கூறுகையில், தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி கரும்பு தோட்டத்துக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவர்கள் தன்னை சாதி ரீதியில் விமர்சித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து 19 வயது பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார், அதில் தன்னை நாசம் செய்ததில் தனக்கு அடையாளம் தெரிந்த இருவரின் பெயர்களை புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண் சுட்டிக்காட்டிய இருவரை கைது செய்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!