பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 மற்றும் அழகே அழகு தொடர்களில் நடிகர், நடிகைகள் இணைந்து ஒன்றாக நடிக்கவுள்ளனர். இந்த இரு தொடர்களின் மகா சங்கமம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.சின்ன திரை தொடர்களுக்கான ரசிகர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் மகா சங்கமம் என்ற பெயரில் இரு தொடர்களின் நடிகர், நடிகைகள் ஒன்றாக இணைந்து நடிப்பது வழக்கமாகி வருகிறது. தொடர்களின் கதை மாறாமல், கதாபாத்திரங்கள் மாறாமல் இரு தொடர்களின் பாத்திரங்களும் சந்தித்துக்கொண்டு கதை நகர்த்தப்படும். இதன்மூலம் இரு தொடர்களுக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரின் பார்வையாளர்கள், அழகே அழகு தொடரால் ஈர்க்கப்படலாம், இதேபோன்று அழகே அழகு தொடரின் ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தொடர்ந்து பார்க்க நேரிடலாம் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 7.30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடரில் அன்ஷிதா, நக்ஷத்திரா, பிரேம் ஜேக்கப், குணா, குறிஞ்சி நாதன், மதன் குமார், சுனிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதேபோன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் நடிகை நிரோஷா, ஸ்டாலின் முத்து, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ், வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.இந்த இரு தொடர்களின் மகா சங்கமம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!.Pandian Stores Azhage Azhagu Unite for maga sangamam in vijay tv.
« முந்தைய செய்தி (Previous)
நாட்டின் சிறந்த நடிகை சாய்பல்லவி - அமீர்கான்...அடுத்த செய்தி (Next) »
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி: முதுமலையில் 3 யானைகள்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: