நீலகிரி,
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி மாவட்டத்தின் முதுமலையில் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது புலிகள், யானைகள், கரடிகள், மான்கள் உள்பட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் புகலிடமாக திகழ்கிறது.
இதனிடையே, கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி காரணமாக ஆறுகளில் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் பறவைகள், விலங்குகள் தண்ணீர் இன்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக முதுமலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.
ஏற்கனவே 2 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் இன்று பொக்காபுரம் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீகூர் மற்றும் ஆனைக்கட்டி ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்டதே காட்டு யானைகள் உயிரிழப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு நடிகைகள் இணையும் மகா...அடுத்த செய்தி (Next) »
பாக்கெட்டில் வெங்காயம் வைத்துக் கொண்டால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம் -...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: