POLLING FLAMES

 

பாக்கெட்டில் வெங்காயம் வைத்துக் கொண்டால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம் - மத்திய அமைச்சர் அட்வைஸ்

1 hour ago 27 ஏப்ரல் 2026 12:53 PM | views : 7

மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா.

இவர் மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க வினோத யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் அவர் கூறியதாவது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன்படுத்துவதில்லை. மே மற்றும் ஜூன் மாதங்களில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் வாட்டி வதைக்கும் போதும் மக்கள் என்னிடம் நான் ஏசி பயன்படுத்தாது குறித்துக் கேட்கிறார்கள். அவர்களிடம் 'இது சம்பல் மண்ணின் தோல். எனக்கு வெப்பம் ஒரு பொருட்டல்ல' என்று பெருமையாக சொல்லுவேன்.

நான் பார்ப்பதற்கு இளைஞனாகத் தெரிந்தாலும், எனது ஆன்மா மிகவும் பழைமையானது. பழைய விஷயங்களை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதும் உங்கள் சட்டைப் பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

இந்த நவீன காலத்தில் அனைவரும் நவீனப் பெட்டிகளை (செல்போன்) சுமந்து செல்கிறார்கள். ஆனால், இந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரோ வெங்காயத்தைச் சுமக்கிறேன்.

ஆயுர்வேதம் வளர்ச்சி கண்டு வரும் சூழலில், இது போன்ற பாரம்பர்ய நடைமுறைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.

அவரின் இந்த பேச்சு இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. இருப்பினும் அவருக்கு ஆதரவுக்க குரலும் எழுந்து வருகிறது. சில நன்மைகள் இருப்பினும் பாக்கெட்டில் வெங்காயம் வைத்திருப்பது வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட தீர்வு இல்லை.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN உதயநிதி ஸ்டாலின் தவெக TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் PMK AIADMK UDHAYANIDHI STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கைது INDIAN CRICKET TEAM திருமாவளவன் CONGRESS அன்புமணி ராமதாஸ் கோவை PARLIAMENT ELECTION வன்னியர் COIMBATORE EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH OPS சீமான் அமமுக தமிழகம் கொலை தேவர் ஓபிஎஸ் THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை RAJINIKANTH BIGG BOSS TAMIL கொரோனா நெல்லை மதுரை AJITH NELLAI பிரதமர் மோடி TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் SURIYA கள்ளக்காதல் தமிழ்நாடு தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை அஜித் TAMILAGA VETTRI KAZHAGAM 2024 T20 WORLDCUP CSK சூர்யா அன்புமணி தென்காசி