POLLING FLAMES

 

ஊட்டியில் தாயை பிரிந்து தவித்த புலி குட்டி மீட்பு - மற்றொரு குட்டியை தேடும் வனத்துறை

1 hour ago 27 ஏப்ரல் 2026 03:34 PM | views : 10

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள், முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. இந்த இடங்களில் புலிகள் வாழ்வதற்கான சூழல் உள்ளதாலும், வனத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமாகவும் கடந்த சில ஆண்டுகளாக புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


கடந்த 7 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 2018-ம் ஆண்டு 34 புலிகள் இருந்த நிலையில், 2024-ம் ஆண்டு 63 ஆக அதிகரித்தது. இதற்கிடையே கடந்த 2023-ம் ஆண்டு 6 குட்டிகள் உட்பட 10 புலிகள் பல்வேறு பகுதிகளில் இறந்தன. இதைத்தொடர்ந்து புலிகளை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆரம்பி பிரிவு அருகில் உள்ள அழகர்மலை பகுதியில் உள்ள தோட்டத்தில் நேற்று முன்தினம் 2 புலி குட்டிகள் தாயை பிரிந்து தவித்தவாறு சுற்றித்திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊட்டி வடக்கு வனச்சரகர் ராம்பிரகாஷ் உத்தரவின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த, பிறந்து 5 மாதங்களே ஆன பெண் புலி குட்டியை வனத்துறையினர் மீட்டனர். தற்போது டாக்டரின் கண்காணிப்பில் கூண்டுக்குள் வைத்து புலி குட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்றொரு புலி குட்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


மீட்கப்பட்ட புலி குட்டி ஆரோக்கியமாக இருப்பதாகவும், நன்றாக பராமரித்து விரைவில் வனப்பகுதியில் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN உதயநிதி ஸ்டாலின் தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU UDHAYANIDHI STALIN ANBUMANI RAMADOSS AIADMK கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் இந்திய அணி காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS திருமாவளவன் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM சீமான் கொலை COIMBATORE கைது தமிழகம் EDAPPADI PALANISWAMI OPS வன்னியர் KEERTHY SURESH அமமுக தேவர் சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS பிரதமர் மோடி AJITH மதுரை வடகிழக்கு பருவமழை RAJINIKANTH THIRUMAVALAVAN நெல்லை NELLAI அன்புமணி 2024 T20 WORLDCUP TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா கள்ளக்காதல் அஜித் ELECTION COMMISSION SURIYA விடுமுறை CSK திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் தென்காசி தமிழ்நாடு தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ்