POLLING FLAMES

 

வழக்குரைஞரான பேரறிவாளன்! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு!

1 hour ago 27 ஏப்ரல் 2026 03:43 PM | views : 9

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பேரறிவாளன் இன்று (ஏப். 27) பதிவு செய்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் சட்டப்படிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இவர்கள் அனைவரையும் உச்சநீதிமன்றம் முன்கூட்டியே விடுதலை செய்தது. சிறையில் இருந்தபோது பேரறிவாளன் இளநிலை, முதுகலை மற்றும் எம்.பில்., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தார். இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளன், பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்தார். சட்டப்படிப்பை முடித்த அவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். பேரறிவாளன் உள்பட 1,248 பேருக்கு வழக்குரைஞராகப் பதிவு செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற கூட்டரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் தலைமை வகித்தார். பார் கவுன்சில் உறுப்பினரும், புதிய வழக்குரைஞர்கள் பதிவுக் குழுவின் தலைவருமான கே. பாலு உறுதிமொழியை வாசித்தார். பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்குரைஞராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பார் கவுன்சில் உறுப்பினர் பிரிசில்லா பாண்டியன் நன்றி தெரிவித்தார்.


மே 2-ல் தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!.Perarivalan enrolled as an advocate with the Bar Council of Tamil Nadu and Puducherry.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN உதயநிதி ஸ்டாலின் தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU UDHAYANIDHI STALIN ANBUMANI RAMADOSS AIADMK கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் இந்திய அணி காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS திருமாவளவன் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM சீமான் கொலை COIMBATORE கைது தமிழகம் EDAPPADI PALANISWAMI வன்னியர் OPS KEERTHY SURESH அமமுக தேவர் சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS பிரதமர் மோடி AJITH மதுரை வடகிழக்கு பருவமழை RAJINIKANTH THIRUMAVALAVAN நெல்லை NELLAI 2024 T20 WORLDCUP அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா கள்ளக்காதல் CSK ELECTION COMMISSION அஜித் SURIYA விடுமுறை திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் தமிழ்நாடு கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி தென்காசி