POLLING FLAMES

 

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

1 hour ago 27 ஏப்ரல் 2026 05:14 PM | views : 7

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்!முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் உள்ள முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். சஹில் பராக் (0 ரன்), கே.எல்.ராகுல் (ஒரு ரன்), நிதீஷ் ராணா (ஒரு ரன்), சமீர் ரிஸ்வி (0 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (5 ரன்கள்), அக்‌ஷர் படேல் (0 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் தில்லி கேபிடல்ஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.அதன் பின், டேவிட் மில்லர் மற்றும் அபிஷேக் போரெல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை உயர்த்தியது. டேவிட் மில்லர் 18 பந்துகளில் 19 ரன்களும் (3 பவுண்டரிகள்) , அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 30 ரன்களும் (3 பவுண்டரிகள்) எடுத்தனர். கைல் ஜேமிசன் 12 ரன்கள் எடுத்தார்.ஆர்சிபி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3.3 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் வெறும் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ராசிக் சலாம் தர், சூயாஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி!76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் அதிரடியாக 34* ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். விராட் கோலி 23* ரன்களும், ஜேக்கப் பெத்தல் 20 ரன்களும் எடுத்தனர்.நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெறும் 6-வது வெற்றி இதுவாகும். புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


In the IPL series, Royal Challengers Bangalore secured a resounding nine-wicket victory against Delhi Capitals.


ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்.


ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK ANNAMALAI ADMK AMMK தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN PMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் AIADMK பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை இந்திய அணி முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் திருமாவளவன் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI சீமான் தமிழகம் கொலை KEERTHY SURESH கைது அமமுக வன்னியர் OPS தேவர் COIMBATORE NELLAI வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் மதுரை TAMIL ACTRESS ஓபிஎஸ் கொரோனா நெல்லை RAJINIKANTH BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN பிரதமர் மோடி AJITH திருப்பரங்குன்றம் அன்புமணி SURIYA விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP கள்ளக்காதல் CSK அஜித் தமிழக சட்டசபை தேர்தல் தமிழ்நாடு தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் தென்காசி