POLLING FLAMES

 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம்

1 hour ago 28 ஏப்ரல் 2026 12:51 AM | views : 10

திருச்செந்தூர்,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், 'வெற்றி வேல்' வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்கரைக்கும் சென்று விஜய் வழிபாடு செய்தார்.

விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் PMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN AIADMK பாமக கனமழை தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் கோவை INDIAN CRICKET TEAM CONGRESS தமிழகம் COIMBATORE கைது PARLIAMENT ELECTION அமமுக வன்னியர் கொலை EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH சீமான் நெல்லை திருமாவளவன் OPS பிரதமர் மோடி தேவர் NELLAI BIGG BOSS TAMIL AJITH ஓபிஎஸ் RAJINIKANTH SURIYA TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் தென்காசி ELECTION COMMISSION கள்ளக்காதல் 2024 T20 WORLDCUP அஜித் விடுமுறை தூத்துக்குடி THIRUMAVALAVAN தீபாவளி அன்புமணி CSK தமிழ்நாடு தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ்