பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன், இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் கடலோர நகரமான ஆஸ்டெண்டைச் சேர்ந்த சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். சிறுவனுக்கு வயது 11. ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பொதுவாக இளங்கலை பட்டத்தை பெற 3 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த சிறுவன் இந்த படிப்பை நிறைவு செய்ய ஓர் ஆண்டு மட்டுமே எடுத்துள்ளார்.
இது குறித்து சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் கூறியதாவது:
நான் வயதில் சிறியவனாக இருப்பது குறித்து எனக்கு கவலையில்லை. இது அறிவை பெறுவது பற்றியது. “அழியாமை” என்பது தனது குறிக்கோள். நான் உலகின் சிறந்த பேராசிரியர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அவர்களின் செயல்பாடுகள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் அறிய விரும்புகிறேன்.
இவ்வாறு அவன் கூறினான்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S