சென்னை அடுத்துள்ள திருக்கழுக்குன்றம், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவர் தனது மனைவி ஜோதி (50), 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிகாலை வீட்டின் பின்புறம் அதிகளவில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்து ராமுவின் மூத்த மகன் முத்தன் எழுந்து சென்று அவ்விடத்தை பார்த்தார்.
அப்போது, வீட்டின் பின்புறமுள்ள மலை முகட்டு பகுதியில், ஜோதி மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது, அவனை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். உடனே முத்தன், தாய் ஜோதியின் அருகில் சென்று எழுப்பியபோது உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
பின்னர் அவரது சத்தம்கேட்டு குடும்பத்தினர், கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர். தப்பியோடிய நபரை துரத்தியப்போதும் அவர் அங்கிருந்து தலைமறைவானார். இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பியோடிய நபர் யார் என்று விசாரித்து வந்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என்பதும், மானாமதியில் உள்ள காயலான் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அப்பெண அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும், தடுத்த ஜோதியை சிறுவன் தாக்கியதால் அவர் இறந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து, தலைமறைவான 15 வயதுடைய சிறுவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறார் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!