Tamil News & polling
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு 51வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் செமி ஃபைனல் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்
இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட துவங்கினார். குறிப்பாக தரமான பவுலராக அறியப்படும் மிட்சேல் ஸ்டார்க் வீசிய 4வது ஓவரில் 6, 6, 4, 6, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் மொத்தம் 28 ரன்கள் விளாசி தெறிக்க விட்டார். அதனால் ஸ்டார்க்கிற்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாஸ் சாதனையும் ரோகித் படைத்தார்.
அவருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் 15 (14) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த சூரியகுமார் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய நிலையில் எதிர்புறம் தொடர்ந்து 224.39 ஸ்ட்ரைக் ரேட்டில் பந்தாடிய ரோகித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 92 (41) ரன்களில் சுயநலமின்றி அவுட்டானார்.
இந்த 8 சிக்ஸர்களையும் சேர்த்து அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர் கடந்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் ரோகித் சர்மா படைத்தார். அது போக டி20 உலகக் கோப்பையில் சுரேஷ் ரெய்னாவுக்கு (101) பின் அதிகபட்ச ஸ்கோர் (92) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அது மட்டுமின்றி டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் யாதவ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 31 (16) ரன்களும் சிவம் துபே 28 (22) ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஹரிதிக் பாண்டியா 27* (17) ரவீந்திர ஜடேஜா 9* (5) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்திய கிரிக்கெட் அணி 205/5 ரன்கள் எடுத்தது. அதனால் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா சமன் செய்தது.
இதற்கு முன் 2012 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியும் 205/4 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத்தொடர்ந்து 206 ரன்களை 15.3 ஓவரில் எடுத்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran Tamil Nadu எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் ADMK AIADMK AMMK மு.க.ஸ்டாலின் MK Stalin டிடிவி தினகரன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் சீமான் PMK தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman பாமக முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam Nellai உதயநிதி ஸ்டாலின் Thoothukudi நெல்லை தமிழகம் காங்கிரஸ்