நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்த செய்தியை கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள முதல் படம் என்பதால், கோட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது..
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த எனது அஜித் அண்ணாவுக்கு நன்றி என்று வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும், ரசிகர்களுக்கு செய்தி பகிர்ந்துள்ள வெங்கட் பிரபு, “கோட் திரைப்படம் பார்ப்பதற்கு முன்னதாக, நீங்கள் வேறெந்த திரைப்படமும் பார்க்கத் தேவையில்லை. சாதாரணமாக வந்து படத்தை கொண்டாடுங்கள், தளபதியை கொண்டாடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “அஜித் சாருக்கு கோட் படத்தின் டிரைலரை அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்றதுடன் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைப் கூறுங்கள்” என தெரிவித்ததைப் பகிர்ந்திருந்தார்.மேலும், கோட் படத்தில் நடிகர் அஜித்தின் ஒரு மொமண்ட் (தருணம்) இருக்கிறது என்று நேர்க்காணல் ஒன்றில் வெங்கட் பிரபு பகிர்ந்திருந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது..
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!