POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

திருப்பதியில் 4 நாள்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை!

1 year ago 24 செப்டம்பர் 2024 03:47 PM | views : 201
திருப்பதியில் 4 நாள்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் ஒரு நாளில் சுமார் 3 லட்சம் லட்டுகள் விற்பனையாகி வந்தன. திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அதிகளவில் லட்டுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக சர்ச்சை எழுந்த விவகாரம் ஆந்திரம் மற்றுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களிடேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் லட்டு விற்பனையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும், தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருவதாகவும் கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், “கடந்த நான்கு நாள்களில் மட்டும் திருப்பதியில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 19 ஆம் தேதி மட்டும் 3.59 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 20 ஆம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21 ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22 ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன” என்றனர்.ஆனால், வழக்கமாக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவந்தது. இப்போது அதைவிட 3 லட்சத்துக்கும் அதிகமாக லட்டுகள் தயாரிக்கப்பட்டுவருகிறது.

லட்டு தயாரிப்பில் கடலைப்பருப்பு, பசு நெய், சர்க்கரை, முந்திரி, பாதாம், உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், லட்டு தயாரிப்பில் தினமும் 15,000 கிலோ அளவிலான பசு நெய் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK AMMK ANNAMALAI ADMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK பாராளுமன்ற தேர்தல் MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாமக அன்புமணி ராமதாஸ் கனமழை காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS திருமாவளவன் ரஜினிகாந்த் முக ஸ்டாலின் இந்திய அணி கோவை சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI COIMBATORE கைது பிரதமர் மோடி தமிழகம் சீமான் OPS KEERTHY SURESH THIRUMAVALAVAN வன்னியர் INDIAN CRICKET TEAM கொலை தேவர் அமமுக NELLAI சூர்யா PARLIAMENT ELECTION ஓபிஎஸ் தென்காசி வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு AJITH கொரோனா SURIYA TAMIL ACTRESS மதுரை நெல்லை கள்ளக்காதல் மோடி CSK அன்புமணி ELECTION COMMISSION தூத்துக்குடி பாலியல் தொல்லை BIGG BOSS TAMIL ASSEMBLY ELECTIONS தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் விடுமுறை PRIME MINISTER MODI கீர்த்தி சுரேஷ் அஜித்