POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ரஷியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

1 year ago 23 அக்டோபர் 2024 04:22 PM | views : 183
மாஸ்கோ:

இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்று தொடங்கியது.

இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதினிடம், உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வுகாண உதவுவதற்கு தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானை சந்தித்து பேசினார். மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலமும் தூதரக ரீதியிலும் அணுக மோடி அழைப்பு விடுத்தார்.

அப்போது மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்தார்.

பின்னர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.

இரு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் எல்லை விவகாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தார். அப்போது சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

2022-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.

ஆனால் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இதற்கிடையே எல்லையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தனது ரோந்து பணிகளை மீண்டும் தொடங்க உள்ள நிலையில். மோடி-ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU MK STALIN AIADMK உதயநிதி ஸ்டாலின் பாமக கனமழை காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் CONGRESS இந்திய அணி கோவை திருமாவளவன் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI தமிழகம் சட்டசபை தேர்தல் கைது COIMBATORE பிரதமர் மோடி முக ஸ்டாலின் சீமான் கொலை KEERTHY SURESH INDIAN CRICKET TEAM அமமுக THIRUMAVALAVAN வன்னியர் தேவர் OPS PARLIAMENT ELECTION மதுரை TAMIL ACTRESS சூர்யா தென்காசி AJITH SURIYA NELLAI நெல்லை கொரோனா ஓபிஎஸ் தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை கள்ளக்காதல் ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் மோடி தூத்துக்குடி ASSEMBLY ELECTIONS விடுமுறை கீர்த்தி சுரேஷ் அஜித் பாலியல் தொல்லை CSK BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI அன்புமணி திருப்பரங்குன்றம்