POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை தெரியுமா?

1 year ago 27 நவம்பர் 2024 03:44 PM | views : 209
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்தாண்டின் வட கிழக்கு பருவமழையின் முதல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




அதன்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 




இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 




அதன்படி சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், நாளை நாகை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக AMMK ADMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN கனமழை மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU AIADMK PMK பாமக பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் தமிழகம் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் திருமாவளவன் கைது சட்டசபை தேர்தல் கோவை EDAPPADI PALANISWAMI CONGRESS COIMBATORE இந்திய அணி கொலை சீமான் INDIAN CRICKET TEAM தேவர் அமமுக KEERTHY SURESH பிரதமர் மோடி OPS வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN வன்னியர் ஓபிஎஸ் NELLAI நெல்லை தென்காசி ASSEMBLY ELECTIONS AJITH TAMIL ACTRESS PARLIAMENT ELECTION தமிழ்நாடு தீபாவளி மதுரை SURIYA அன்புமணி BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை விடுமுறை அஜித் NORTHEAST MONSOON MADURAI TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் CSK PRIME MINISTER MODI மோடி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் சூர்யா தூத்துக்குடி