POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

2 hours ago 20 ஏப்ரல் 2026 06:27 AM | views : 108

விவாகரத்து வழக்கின் விசாரணைக்காக விஜய் மற்றும் சங்கீதா வரும் ஜூன் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தவெக தலைவரும் நடிகருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த பிப். 24-ஆம் தேதி இணையவழியில் இந்த மனுவை சங்கீதா தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், விவாகரத்து வழக்கை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.


சங்கீதா தனது மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திருந்தார். அதில், “நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறி விஜய் தொடர்பில் இருந்து வருவதால், 2021-ஆம் ஆண்டு முதல் நான் தனியாக வசித்து வருகிறேன். இது சமூக வலைதளங்கள் மற்றும் எங்களது நட்பு வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளதால் நானும் என் குழந்தைகளும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம்.


விஜய் உள்பட அனைத்துத் தரப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தேவைப்படும்பட்சத்தில் நடிகையையும் இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக சோ்க்கவும் தயங்கமாட்டேன்.



இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண 2024, ஆகஸ்ட் முதல் 2025, பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பலமுறை சட்டரீதியாக விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பினேன். விஜய்யை இரண்டு முறை நேரில் சந்தித்தும் இதுதொடர்பாக பேசினேன். இறுதியாக 2025, நவம்பா் 9-ஆம் தேதி அவருடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினேன்.ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேறு வழியின்றி நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணைக்காக இன்று(ஏப். 20) நேரில் ஆஜராகுமாறு விஜய் - சங்கீதாவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.


இந்த நிலையில் இந்த வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விஜய்யும் சங்கீதாவும் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்றும் கூறப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களால் இருவரும் ஆஜராகவில்லை.


நடிகரும் தவெக தலைவருமான விஜய் காணொளி மூலம் ஆஜராக அனுமதி அளிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் குமரேசன் மனு அளித்தார். குடும்பப் பிரச்சினை என்பதால் ஊடகங்களில் விவாதிக்க தடை கோரி விஜய் தரப்பில் புதிய மனு ஒன்றும் அளிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, விஜய் - சங்கீதா இருவரும் வரும் ஜூன் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். விஜய் மற்றும் சங்கீதாவின் திருமணம் பிரிட்டனில் 1998, ஜூலை 10-ஆம் தேதி முதலில் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1999, ஆகஸ்ட் 25-ஆம் தேதி சென்னையில் அவர்களது திருமணச் சடங்குகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI ADMK தவெக AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN PMK மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் AIADMK பாமக கனமழை தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் திருமாவளவன் CONGRESS சட்டசபை தேர்தல் தேவர் தமிழகம் சீமான் கைது இந்திய அணி EDAPPADI PALANISWAMI UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION கோவை ரஜினிகாந்த் COIMBATORE கொலை THIRUMAVALAVAN வன்னியர் KEERTHY SURESH அமமுக OPS பிரதமர் மோடி ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை நெல்லை INDIAN CRICKET TEAM கொரோனா TAMIL ACTRESS தமிழ்நாடு மதுரை SURIYA AJITH NELLAI BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் CSK மோடி ELECTION COMMISSION அஜித் தூத்துக்குடி ASSEMBLY ELECTIONS தென்காசி தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM பாலியல் தொல்லை சூர்யா விடுமுறை கள்ளக்காதல்