POLLING FLAMES

 

13 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

1 hour ago 29 ஏப்ரல் 2026 01:17 AM | views : 26

திருநெல்வேலி,

கடந்த 2025-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது 13 வயதான மகளிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்யபெக்டர் மாரியம்மாள் புலன் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமயின் தந்தையை கைது செய்தார்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை பின்வருமாறு :

9 (n) r/w 10 of POCSO Act-ன்படி 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் பார்வதி(எ) பானு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 9 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக ANNAMALAI BJP AMMK தவெக ADMK உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் PMK மு.க.ஸ்டாலின் பாமக இந்திய அணி UDHAYANIDHI STALIN AIADMK கனமழை தமிழக வெற்றிக் கழகம் கோவை காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் தமிழகம் INDIAN CRICKET TEAM COIMBATORE முக ஸ்டாலின் CONGRESS கொலை அமமுக திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH OPS EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் சீமான் கைது வன்னியர் PARLIAMENT ELECTION AJITH மதுரை தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS நெல்லை NELLAI SURIYA TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் தென்காசி கொரோனா சூர்யா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் மோடி தீபாவளி தூத்துக்குடி அஜித் CSK கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH விடுமுறை கள்ளக்காதல் அன்புமணி ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தடுப்பூசி