POLLING FLAMES

 

சீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்

1 hour ago 29 ஏப்ரல் 2026 08:06 AM | views : 19

தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.


வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்ட விஜய், தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய், இன்று மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் சென்ற விஜய் அங்கு இருந்து கோவிலுக்கு கார் மூலமாக சென்றார். விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் போலீசார் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் தவெக TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK UDHAYANIDHI STALIN AIADMK கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழகம் காங்கிரஸ் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கொலை கோவை CONGRESS திருமாவளவன் INDIAN CRICKET TEAM சீமான் அமமுக சட்டசபை தேர்தல் வன்னியர் OPS EDAPPADI PALANISWAMI கைது பிரதமர் மோடி COIMBATORE KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் ஓபிஎஸ் தமிழ்நாடு மதுரை SURIYA BIGG BOSS TAMIL சூர்யா வடகிழக்கு பருவமழை AJITH NELLAI TAMIL ACTRESS நெல்லை THIRUMAVALAVAN அன்புமணி திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை கொரோனா தூத்துக்குடி CSK கீர்த்தி சுரேஷ் தென்காசி ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION RAJINIKANTH அஜித் தீபாவளி