அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நாட்டில் தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.


மேட்ரிஸ் வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி 122 - 132 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 85 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து ஒவ்வொரு கருத்துக் கணிப்புகளும் சில வேறுபாடுகளுடன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.


மேட்ரிஸ் கருத்துக் கணிப்புதமிழ்நாடு பேரவைத் தேர்தலில் மேட்ரிஸ் வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்புகளில் திமுகவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



திமுக தலைமையிலான கூட்டணி 122 - 132 தொகுதிகளைக் கைப்பற்றும். அதிமுக தலைமையிலான கூட்டணி 50 - 65 தொகுதிகளில் வெற்றி பெறும்தவெக கட்சி 13- 18 இடங்களில் வெற்றிபெறும்.நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் 5 முதல் 8 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்புதிமுக தலைமையிலான கூட்டணி 125 - 145 அதிமுக தலைமையிலான கூட்டணி 60 - 80தவெக கட்சி 18 - 24நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் 2-6 இடங்களைக் கைப்பற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரிபப்ளிக் - பி மார்க் கருத்துக் கணிப்பு

  1. திமுக கூட்டணி : 125 - 145 இடங்களில் வெற்றி
  2. அதிமுக கூட்டணி : 65 - 85 இடங்களில் வெற்றி
  3. தவெக : 16 - 26 இடங்களில் வெற்றி
  4. மற்றவை: 1 - 6 இடங்களில் வெற்றி.


With the Tamil Nadu Assembly elections now over, the post-election opinion polls have been released.


5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!.


பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel