POLLING FLAMES

 

களக்காடு அருகே சிறுவன் ஓட்டி சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- சிறுமி பலி

1 hour ago 30 ஏப்ரல் 2026 09:38 AM | views : 21

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காரில் புறப்பட்டார்.

அப்போது அவரது சகோதரர் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார். முருகனும் அவரிடம் காரை கொடுத்து உள்ளார். சிறுவனான துரைப்பாண்டி காரை எடுத்துக்கொண்டு பெட்ரோல் நிரப்ப புறப்பட்டார்.

இதைப்பார்த்த அவரது உறவினர்களின் குழந்தைகளும் வருவதாக கூறினர் அதனைத் தொடர்ந்து துரைப்பாண்டியும், அதே ஊரை சேர்ந்த முருகன் மகள் கன்சிகா (4), தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஷ் (8) ஆகியோர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

களக்காடு மங்கம்மாள் சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுமி கன்சிகா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

மேலும் காரை ஓட்டி சென்ற சிறுவன் துரைப்பாண்டி, தினேஷ், பிரதீப். லித்திஷ் ஆகிய 4 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துரைப்பாண்டியை களக்காடு தனியார் மருத்துவமனையிலும், தினேஷை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பிரதீப், லித்திஷ் ஆகியோரை நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் காரை ஓட்டி வந்த சிறுவன் துரைப்பாண்டி, அவருக்கு காரை கொடுத்த முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து சிறுமி பலியான சம்பவம் களக்காட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் MK STALIN தவெக TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாராளுமன்ற தேர்தல் கனமழை UDHAYANIDHI STALIN ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் தமிழகம் பாமக PARLIAMENT ELECTION காங்கிரஸ் இந்திய அணி கோவை CONGRESS COIMBATORE பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை KEERTHY SURESH சட்டசபை தேர்தல் AJITH கைது INDIAN CRICKET TEAM OPS சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM EDAPPADI PALANISWAMI அமமுக NELLAI TAMIL ACTRESS BIGG BOSS TAMIL வன்னியர் நெல்லை தேவர் THIRUMAVALAVAN மதுரை ஓபிஎஸ் தீபாவளி தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை PRIME MINISTER MODI அன்புமணி ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS தூத்துக்குடி கொரோனா கள்ளக்காதல் விடுமுறை SURIYA தமிழக சட்டசபை தேர்தல் RAJINIKANTH அஜித் CSK தென்காசி கீர்த்தி சுரேஷ் சூர்யா திருப்பரங்குன்றம்