நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது!
4 years ago
12 ஜூலை 2021 11:09 AM | views : 157
தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து அதை சிறப்பாக செய்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆராதனா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதிகளுக்கு உண்டு. மகனின் வரவு பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
”18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவிக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி” என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சோகம் இழையோடுவதையும் காண முடிகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?
சிவகார்த்திகேயன் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குள் அப்பா இறந்துபோனார். குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலில், தனக்குள்ளே இருந்த மிமிக்ரி திறமை மூலம் வாழ்க்கையில் முன்னேறினார் இந்தக் கலைஞர்.
மிமிக்ரி செய்து தொண்டை வலித்தாலும், அதைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைக்கும் அளவுக்கு பக்குவம் இருந்தது. அவரது திறமையும், விடா முயற்சியும் உழைப்பும் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.