INDIAN 7

Tamil News & polling

அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை!

07 மார்ச் 2024 10:15 PM | views : 988
Nature

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் குமாருக்கு முளை அறுவை சிகிச்சை
பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடிகர் அஜித், சென்னை உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சமீபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், இதையடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை! சமூக ஊடகத்தில் தீயாய் பரவும் செய்தி

தங்கத்தில் குளித்த உலகின் முதல் பில்லியனர்! மஸ்க், அம்பானியை விடவும் பணக்காரர்:யார் இந்த மான்சா மூசா?

பரிசோதனையின் இறுதியில், அஜித்தின் மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு நடிகர் அஜித் குமாருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் குமாரின் தற்போதைய உடல்நிலை
அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும், தற்போது அஜித் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை! சமூக ஊடகத்தில் தீயாய் பரவும் செய்தி

ஹவுதியின் திடீர் ஏவுகணை தாக்குதல்: ஏடன் வளைகுடாவில் சிதறிய லைபீரியா கப்பல்!
ஹவுதியின் திடீர் ஏவுகணை தாக்குதல்: ஏடன் வளைகுடாவில் சிதறிய லைபீரியா கப்பல்!
மேலும் இதன் நம்பகத்தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடா முயற்சி" (Vidaa Muyarchi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்