வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று காலையில் வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்கே.சி. வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகைகளில் உதவலாம் என்று விவாதித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் 200 வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.
ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் வீடுகளை கட்டவும் ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.இந்த கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும் காங்கிரஸ் குடும்பத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 200 வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!