INDIAN 7

Tamil News & polling

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்புள்ள அரசு பொறம்போக்கு நிலம்!

13 ஆகஸ்ட் 2024 01:07 PM | views : 932
Nature

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி நிலம் பொன்னேரி அருகே ஒரக்காட்டில் மீட்கப்பட்டது. நிலத்தகராறில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாகேந்திரன் இடையே ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கு காரணமான 150 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து கொலைக்கான விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் உள்ள பொன்வண்டு சோப்பு நிறுவன இடத்தை அதிகாரிகள் மீட்டனர். பொன்வண்டு நிறுவனத்தின் 14.5 ஏக்கர் நிலத்தை கைமாற்றி விடுவதில் ஆம்ஸ்ட்ராங் – ரவுடி நாகேந்திரன் இடையே மோதல் ஏற்பட்டது. ரூ. 150 கோடி மதிப்பு நிலம் தொடர்பான மோதலே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (43 வயது). இவரது மனைவி கலையரசி (33 வயது). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள்

Image ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பாராத, விரும்பாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. அந்த வகையில் அஜித்குமார், கவின், ரிதன்யா



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்