'தங்கலான்' திரைப்படம் விமர்சன ரீதியாக... ஒரு பக்கம் பாராட்டுகளை குவித்து வந்தாலும், வசூல் ரீதியாக 100 கோடியை எட்ட போராடி வருவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் 'சார்பட்டா' படத்திற்கு போட்ட உழைப்பு, அர்ப்பணிப்பை விட 100 மடங்கு போட்டுள்ள படம், 'தங்கலான்'. இந்த படத்திற்காக விக்ரம், மாளவிகா, பார்வதி, போன்ற முன்னணி நடிகர்களின் உழைப்பு அதிகம் அவனிக்கப்பட்டாலும், இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு துணை நடிகர்களின் உழைப்பும் போற்ற தக்க ஒன்றே.
தங்கம் எடுக்கும் கோலார் தங்க சுரங்கம்... பழங்குடி மக்களுக்கு சொந்தமான இடம் என்பதை 'தங்கலான்' படத்தின் மூலம் எடுத்து கூறியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித்... பிரிட்டிஷ் காரர்களால் எப்படி பழங்குடி மக்கள் தங்கம் எடுக்க நிர்பந்திக்க பட்டனர் என்பதையும், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சியுடன் படமாக்கி உள்ளார். அதே சமயம் தேவை இல்லாத சில கருத்துக்கள் இப்படத்தின் உள்ளே திணிக்கப்பட்டது தான் இந்த படத்தின் ட்ரா பேக்காகவும் பார்க்கப்படுகிறது.
இதுவரை உலக அளவில் 60 கோடிக்கு மேல் 'தங்கலான்' வசூல் வேட்டை செய்திருந்தாலும், விடுமுறை நாட்கள் கடந்து விட்டதாலும், அடுத்த வாரம் அரை டஜன் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு கார்த்திருப்பதாலும், 'தங்கலான்' படம் தொடர்ந்து திரையரங்கில் ஓடுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பல திரையரங்குகளில் தங்கலான் படத்திற்கு கூட்டமே வரவில்லை என்பது ஒரு காரணம்.
விமர்சன ரீதியிலான வெற்றியை விக்ரமுக்கு 'தங்கலான்' கொடுத்திருந்தாலும்... 100 முதல் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்வது கடினமே என கூறப்படும் நிலையில், இப்படம் வசூல் ரீதியான வெற்றியை பெற தவறி விட்டதாகவே பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு சக்ஸஸ் மீட் வைத்து படக்குழு கொண்டாடி இருந்தாலும், 100 கோடி வெற்றி கிளப்பில் விக்ரமை தங்கலான் இணைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல்
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!