பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘எமொ்ஜென்சி’ ஹிந்தி திரைப்படத்தை தங்கள் மாநிலத்தில் வெளியிடத் தடை செய்வது குறித்து தெலங்கானா மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..
இத்திரைப்படத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளாா்.. தடைக்கான பரிசீலனை குறித்து தெலங்கானா மாநில அரசு ஆலோசகா் முகமது அலி சபீா் கூறுகையில், ‘கங்கனாவின் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சீக்கிய அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதனை பரிசீலிப்பதாக முதல்வா் ரேவந்த் ரெட்டியும் வாக்குறுதி அளித்துள்ளாா்’ என்றாா்.. சீக்கியா்களின் மதிப்பைக் குறைக்கும் வகையில் ‘எமொ்ஜென்சி’ படத்தில் சில காட்சிகள் உள்ளதாக தெரிகிறது.
எனவே, சீக்கிய அமைப்பினா் தடை கோரியுள்ளனா்.. மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சா்ச்சைக்குரிய வகையில் பேசியதையடுத்து, அப்போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த சீக்கிய விவசாயிகளும் கங்கனா மீது அதிருப்தியில் உள்ளனா்.
இதனிடையே, ‘எமொ்ஜென்சி’ திரைப்படத்துக்கு தணிக்கைக் குழு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்று ‘எக்ஸ்’ வலைதளத்தில் கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளாா். அத்திரைபடத்தை செப்டம்பா் 6-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது..
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!