வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்த கோட் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அதை பார்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி ரசிகர்கள் லைட்டா கவலை அடைந்தார்கள். ஏனென்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் காட்சியே 9 மணிக்கு தான் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே கோட் படத்தை பார்க்க முடியவில்லையே என விஜய் ரசிகர்கள் புலம்பினார்கள்.
இருந்தாலும் பரவாயில்லை என 9 மணி காட்சியை பார்க்க தியேட்டர்களுக்கு சென்றுவிட்டார்கள். கோட் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், த்ரிஷா ஆகியோர் முதல் காட்சியை பார்க்க தியேட்டருக்கு வந்தார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
கோட் படம் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள் அது பற்றி கூறியிருப்பதாவது,
விஜய்ணா மிரட்டலாக இருக்கிறார். டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். அது ஒன்று தான் கொஞ்சம் மைனஸ். பார்த்து பார்த்து படத்தை செதுக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. ஓபனிங்கே படு மாஸாக இருந்தது. விஜய்ணாவை இப்படி பார்த்து ரொம்ப காலமாச்சு.
படம் போர் அடிக்கவே இல்லை. பரபரப்பாக செல்கிறது. தளபதி, இளைய தளபதி காட்சிகள் அருமை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்ணா நடித்த லியோ படத்தை விட கோட் படம் நன்றாக இருக்கிறது. அண்ணாவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் பார்சல் என தெரிவித்துள்ளனர்.
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!