POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி- ராமதாஸ் குற்றச்சாட்டு

1 year ago 17 அக்டோபர் 2024 08:40 AM | views : 181
திண்டிவனம்:

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்பம்பர் மாதம் 10 நாட்களுக்கு பின் சம்பளம் வழங்கியது. கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை. மொத்த உற்பத்தியில் கல்வி, சுகாதாரத்திற்கு 3 மடங்கு நிதி ஒதுக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. 2030 ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு 4,15 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு 1.61 லட்சம் கோடியாகவும் இருக்கும். தற்போது 1.56 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ.20,198 கோடியாகவும் உள்ளது. பள்ளிகல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சீரழிய போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். எனவே ஆசிரியர்களை நியமிக்கவில்லை. முதன்மை மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 1 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 50 ஆயிரம் கோடியாக வரும் ஆண்டில் உயர்த்தவேண்டும்.

சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. வெள்ளதடுப்பு பணிகளை முடிக்காததால் மழையினால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும்.

விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளது. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ளது. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதிய கடைகளை திறக்கப்பட உள்ளதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது. வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது. அப்படியும் இக்கடைகள் திறந்தால் நானே அக்கடைகளுக்கு பூட்டு போடுவேன்.

முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தி 152 அடியாக உயர்த்தலாம் என்று 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் இன்னமும் உயர்த்தப்படாமல் இருக்க கேரள அரசு ஒத்துழைக்காததுதான் காரணமாகும்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும் 3 விழுக்காடு அகவிலைப்படி வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK AMMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக உதயநிதி ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் திருமாவளவன் ரஜினிகாந்த் CONGRESS இந்திய அணி தமிழகம் சட்டசபை தேர்தல் கைது கோவை COIMBATORE INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI UDHAYANIDHI STALIN KEERTHY SURESH அமமுக பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை தேவர் வன்னியர் கொலை PARLIAMENT ELECTION THIRUMAVALAVAN OPS SURIYA NELLAI ஓபிஎஸ் நெல்லை TAMIL ACTRESS சீமான் தென்காசி AJITH ASSEMBLY ELECTIONS தீபாவளி தமிழ்நாடு தூத்துக்குடி பாலியல் தொல்லை NORTHEAST MONSOON CSK சூர்யா திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் மதுரை அஜித் ELECTION COMMISSION BIGG BOSS TAMIL கள்ளக்காதல்