நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் தான் தற்போது புஷ்பா 2 என்கிற பான் இந்தியா படத்தையும் தயாரித்து உள்ளது.
Ajithகுட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி உள்ளதாம். இதை முடித்ததும் படத்தின் பின்னணி வேலைகளை தொடங்கி, படத்தை வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு வேறு இசையமைப்பாளரை கமிட் செய்து உள்ளார்களாம். அந்த வகையில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அனிருத் ஏற்கனவே கைவசம் எக்கச்சக்கமான படங்களை வைத்திருப்பதால் அவர் நோ சொல்லிவிட்டார். இதனால் தற்போது ஜிவி பிரகாஷை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளார்களாம்.
குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னர் இயக்கிய மார்க் ஆண்டனி என்கிற மாஸ் ஹிட் படத்திற்கு ஜிவி தான் இசையமைத்து இருந்தார். அதுமட்டுமின்றி ஆதிக்கின் நெருங்கிய நண்பர் என்பதால் இதில் இசையமைக்க ஓகே சொல்லி உள்ளார் ஜிவி. இதன்மூலம் நடிகர் அஜித்துடன் 17ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதற்கு முன்னர் கடைசியாக அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த கிரீடம் படத்துக்கு இசையமைத்து இருந்தார் ஜிவி பிரகாஷ்.
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!