பிக் பாஸ் 5க்கு வந்தது எப்படி, முன்னாள் காதலி யாஷிகா பற்றியும் ஓப்பனாக பேசி இருக்கிறார் நிரூப். என்ன கூறி உள்ளார் என பாருங்க.
என் பெயர் நிரூப், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை அயனாவரம் அருகில் எங்கோ பிறந்தேன். நான் சின்ன வயதில் இருந்தே பள்ளியில் ரொம்ப சைலன்ட் ஆன ஒரு பையன். நானும் யாருடனும் நேரம் எடுத்து பேச மாட்டேன், என்னுடனும் யாரும் எப்ப மாட்டாங்க.
நான் 9ம் வகுப்பு படிக்கும்போது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய சோகமான விஷயம் நடக்கிறது. எனது அம்மாவிற்கு Schizophrenia என்கிற நோய் இருக்கிறது என கண்டுபிடித்தார்கள். அது ஒரு mental disorder. அவர் என்ன செய்கிறார் என அவருக்கே தெரியாது.
நான் 10ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் சேர்ந்தேன். அப்போது தான் எனக்கு வாழ்க்கையா பல விஷயங்களை சொல்லி கொடுத்தது. நான் சேர்ந்த கல்லூரியில் படித்தவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. அவர்கள் சென்னை லோக்கல் ஸ்லாங்கில் பேசினார்கள். எனக்கு தமிழ் தெரியாது என அவர்களிடம் பொய் கூறியவிட்டேன். ஒருவாரத்தில் அவர்கள் நம்பிவிட்டார்கள்.
அதன் பின் அந்த பொய்யை காப்பாற்றுவதற்காக நடித்தேன். அவர்கள் உடன் பேசவே வேண்டாம் என நினைத்தேன், அதனால் தான் அப்படி சொன்னேன். சில மாதங்களுக்கு பிறகு தான் அவர்களை பற்றி எல்லாம் என தெரியவந்தது. என் உடன் தான் இருப்பார்கள், ஆனால் என்னை பற்றியே தவறாக பேசுவார்கள்.
மூன்று வருடம் அப்படியே நடித்தேன், எனக்கு தமிழ் தெரியும் என தற்போது அவர்களுக்கு தெரிந்தால் கூட அவர்களுக்கு ஷாக் ஆக இருக்கும். அந்த காலகட்டத்தில் நான் மனிதர்கள் பற்றி நான் அதிகம் புரிந்துகொண்டேன்.
நான் டிப்ளமோவில் டிஸ்டின்க்ஷன் வாங்கி பாஸ் செய்தேன். அதன் பின் எஸ்ஆர்எம் கல்லூரியில் ஸ்கலர்ஷிப் உடன் பிடெக் படிக்க சேர்ந்தேன். ஆனால் எனக்கு சர்டிபிகேட் வேண்டாம் என் அப்பாவிடம் கூறிவிட்டேன்.
அதன் பின் மாடலிங் செய்யபோவதாகக் கூறினேன். ஆனால் உனக்கு தான் யாருமே தெரியாதே என அப்பா சொன்னார். அந்த நேரத்தில் தான் நான் யாஷிகாவை பார்த்தேன். நான் பிக் பாஸ் வருகிறேன் என சொன்னபோது யாஷிகாவின் முன்னாள் காதலர் வருகிறார் என செய்திகள் போட்டார்கள். அவர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட எனக்கு அது பெருமையான விஷயம்தான். அதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. உனக்கு அசிங்கமாக இல்லையா என சிலர் என்னிடமே கேட்டார்கள். இதிலென்ன அசிங்கம், அது தான் உண்மை எனக்கு அவர்தான் ஒரு வாழ்க்கையை காட்டினாள். ஏன் மக்கள் தவறாக நினைக்கிறார்கள், ஒரு பெண்ணால் பையன் வளரவே கூடாதா.
எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரிய ஆசை. பிக் பாஸ் வந்தால் அது கண்டிப்பாக கிடைக்கும் என எனக்கு தெரியும். நான் பல அடிக்ஷன் சென்று இருக்கிறேன். என் உயரத்தை பார்த்து பலரும் நிராகரித்து விடுவார்கள்.
பிக் பாஸ் வந்தால் புகழ் கிடைக்கும் அதன் மூலமாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நான் உயரத்திற்கு போகிற போது தான் என்னால் இன்னும் பத்து பேருக்கு உதவ முடியும் என கதையை சொல்லி முடித்தார் நிரூப்.
யாஷிகா பற்றி ஓப்பனாக பேசிய அவரை பிரியங்கா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் பலரும் பாராட்டினார்கள்.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!